1,607 Views
ஹனிவெல் நிறுவனத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேவ் கோட் தனது இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ள அவர் அதன் பின்னர் தனது பிரத்தியேக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் பின்னர் பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்னவுடன் ஒரு மணித்தியாலம் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது வர்த்தகம் , முதலீடு தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பின் பின்னர் காலியில் உள்ள ஹோட்டலொன்றில் அன்றைய இரவு பொழுதைக் கழித்துள்ள டேவ் கோட் அடுத்த நாள் அமெரிக்க நோக்கிப் பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க பல்தேசிய நிறுவனமான ஹனிவெல் Honeywell International, Inc., போர்ச்சுன் 500 நிறுவன ங்களில் ஒன்றாகும் ,
அதேபோல் டேவ் கோட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்பதும் குறிப்பிட த்தக்கது.