சிறிலங்கா சுதந்திர கட்சியில் சிலர் மோசடிகளில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்.
மோசடிகாரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதா இல்லையா என்பது குறித்து பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை – நுபே பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர், அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் தாம் எங்கே இருக்கின்றோம் என்பது குறித்து சுயநினைவற்று இருக்கின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் ஆட்சியை கவிழ்ப்பதா, ஆதரவளிப்பதா என்பது குறித்து அவர்கள் தெளிவற்று இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும், அதிகபடியான ஆசனங்களை பெறும் கட்சியும், அதற்கு அடுத்தபடியான ஆசனங்களை பெறும் கட்சியும் குறைந்த பட்சம் 2 வருடங்கள் தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.