Bangalore wins - பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் வெற்றிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,019 Views
பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 180 ஒட்டங்களை பெற்றது.
பதிலளித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது தோல்வியை தழுவியது.
இதன் மூலம் நாளைய தினம் இடம்பெறும் 2வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாட பெங்களுர் அணி தகுதி பெற்றுள்ளது.
இதன்படி, நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி, கொல்கத்தாவில் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறும் இறுதி போட்டியில் முன்பை அணியுடன் மோதவுள்ளது.