மூளைக் கட்டிகளில், 'கிளியோமாஸ்' வகை கட்டிக்கு சிகிச்சை செய்வது கடினமான ஒரு விடயம் காரணம் இது வேகமாக பரவுவதால் மருத்துவர்களால் அதை கண்டு, நீக்குவது சவாலாக உள்ளது.
தேளின் விஷத்தில் உள்ள, 'டொசுலெரிஸ்டைடு' என்ற இரசாயனப் பொருளை செயற்கை முறையில் உருவாக்கி, அதனுடன் ஒளிரும் இரசாயனப்பொருள் ஒன்றையும் கலந்து மூளையில் செலுத்தும் போது, அந்தக் கலவை கிளியோமாஸ் கட்டியிலுள்ள செல்களுடன் சீக்கிரம் ஐக்கியமாகி விடுகிறது. பிறகு, அகச் சிவப்புக் கதிர்கள் மூலம், 'ஸ்கேன்' செய்தால், மூளையில் அந்த இரசாயன கலவை ஐக்கியமாகியுள்ள இடங்கள் ஒளிர்வதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், மூளையில் கிளியோமாஸ் கட்டி பரவியுள்ள இடங்களை, மருத்துவர்களால் துல்லியமாக அறிய முடிகிறது. வேறு வகை புற்று நோய்களையும் அறிய இந்த முறை உதவும். சோதனைகளின் போது, 17 பேருக்கு தேள் விஷ இரசாயனப் பொருளை மூளையில் செலுத்திய போது, நச்சுத் தன்மையோ, பிற பக்க விளைவுகளோ ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்