அங்குள்ள ஆண்கள் ஒவ்வொவரும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால், சிறை தண்டனை என்று அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சில, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சில சம்பவங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.
இப்படித்தான் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இந்த விடயம் சமூக ஊடகங்களின் பேசு பொருளில் ஒன்றாக மாறி இருந்தது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு சில நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் இருப்பதால், சுவாசிலாந்தில் இந்த அறிவிப்பின் தாக்கம் பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் சமூக வலைதளத்தில் எழுப்பப்படும் கருத்துகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. இப்படியான அறிவிப்பு ஒன்றை தாம் வெளியிடவில்லை என்று அந்நாட்டின் அரசர் மஸ்வாதி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டரிலும் விளக்கம் அளித்துள்ளார். குறித்த ட்விட்டர் பதிவில், சுவாசிலாந்து நாட்டில் உள்ள ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று, தமது அரசர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.