நினைவாற்றல் ஒவ்வொரு நாளும் அதிகரிக்க வல்லாரை பெரிதும் உதவுகின்றது. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து, அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.
நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வம் பழத்தின் உட்பகுதியை எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஞாபக மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.
கருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் நன்மைகளை அறிந்து அதனை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள். கருஞ்சீரககத்தைப் பொடியாக அரைத்து, உணவில் கலந்து உண்பதால், ஞாபக சக்தி அதிகரிக்கின்றது.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.
நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் எமது நினைவாற்றல் பெருகும்.