கனடாவை சேர்ந்த, ஸ்டீவ் பைரொ கனடியன், ராப்டர் சரணாலயத்தில், ஒரு பருந்தின் புகைப்படத்தை எடுத்து, அதனை சமூக ஊடகங்களில், முக்கியமாக, ஃபேஸ்புக்கில் சாதாரணமாகப் பதிவேற்றியுள்ளார்.ஆனால் அது மிகப் பரவலாக எல்லோராலும் பேசப்படுகிறது.
நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்திருந்தார். அதில் ஒன்றுதான் இந்தக் கழுகுப் புகைப்படம்.
நேர்கொண்ட பார்வையுடன், இரண்டு இறக்கையும் தண்ணீரில்ப் பட, அந்தப் புகைப்படத்தில் கழுகு பறக்கிறது.என்னவொரு காட்சி என எல்லோரும் வியக்குமளவுக்கு உள்ளது.
விளையாட்டு வினையாகும். இங்கு இவருக்கு விளையாட்டு புகழாக மாறி இருக்கிறது.அதாவது,பொழுதுபோக்காக, விளையாட்டாகச் செய்த விடயம் ,இன்று சர்வதேச அளவில் பேசப்படுவது உண்மையில் போற்றத்தக்கது.