6,202 Views
கறுவாத்தோட்டை பொலிஸாரினாலேயே இச்சடலம் மீட்கப்பட்டது.
53 வயதான , மஹரகமையை வசிப்பிடமாகக் கொண்ட பிரசாத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டதுடன் அவர் அதே பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்பவம் தொடர்பாக பல புதிய விடயங்கள் வெளியாகியுள்ளன.
பிரசாத் கடந்த 2 ஆம் திகதி பகல் தனது வீட்டில் இருந்து கொழும்பில் உள்ள தேர்ஸ்டன் கல்லூரிக்கு வந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட போது நீச்சல் தடாகத்தின் அருகில் கையடக்கத் தொலைபேசியொன்றும் இருந்துள்ளது.
மேலும் சடலத்தின் மூக்கில் ரத்தக் கறையும் காணப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான அவர் சில காலங்கள் அமெரிக்காவில் இருந்துள்ளதுடன் திருமணத்தின் பின்னர் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனைவியும் , பிள்ளையும் கண்டியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவர் பிள்ளையை அடிக்கடி தனது இலத்துக்கு அழைத்து வந்த தாகவும் ஆனால் மனைவி மீண்டும் வந்து பிள்ளையை கண்டிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனாலும் அவர் கவலயடைந்திருந்ததாகவும் தெரியவருகின்றது.