11,046 Views
இதற்கு ஏற்றாற் போல இலங்கை கிரிக்கெட்டும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
முதற்கட்டமாக விதிமுறைகளுக்கு முரணான பந்துவீச்சுப் பாணியை பின்பற்றுவோரை கண்டறிய குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் நியமித்தது.
அடிமட்டம் (பாடசாலை மட்டம் முதல்) முதல் முதற்தர போட்டிகள் வரை அனைத்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்களையும் அலசுவதே இதன் நோக்கமாகும்.
இதன்படி, 2014-2015 காலப்பகுதியில் கழக மற்றும் பாடசாலை மட்ட வீரர்கள் 170 பேர் ( சுழல் மற்றும் வேகப்பந்து ) முறையற்ற பந்துவீச்சுப் பாணியை பின்பற்றி வருவதை இலங்கை கிரிக்கெட் இணங்கண்டது.
அக் குழுவில் இருந்த நடுவர்கள் முறையற்ற பந்துவீச்சு முறையைக் கொண்ட பந்துவீச்சாளர்களை இணங்கண்டு அவர்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பு பிரிவுக்கு அறிக்கையளித்தது. பயிற்றுவிப்பு பிரிவானது அவர்களின் பந்துவீச்சு முறையை அவதானித்து அவற்றை சரிபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியது.
தமது பந்து வீச்சுப் பாணியை சீர்செய்துகொள்வதற்கு அனைவருக்கும் தனித்தனியான பந்துவீச்சு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து தமது பந்துவீச்சை சீர் செய்து ஐ.சி.சி இன் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக மாற்றிய 42 பந்துவீச்சாளர்களுக்கு இலங்கை கிரிக்கெட் விலக்களித்துள்ளது.
விதிமுறைக்குட்பட்டதும் , சீர்படுத்தப்பட்டதுமான பந்துவீச்சை, மதிப்பீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அவ் வீரர்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இதேவேளை 42 வீரர்களுக்கு விலக்களிக்கப்பட்ட போதிலும் , 128 பந்துவீச்சாளர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு பந்துவீச்சை சீர்படுத்த முடியாமல் போயுள்ளதுடன் அவர்கள் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் சிறப்பு பந்துவீச்சாளர்களாக போட்டிகளில் கலந்துகொள்வதிலும் சந்தேகம் நிலவுகின்றது.
இதேவேளை இந்நடவடிக்கையானது பல இளம் பந்துவீச்சாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட நாட்களாக ஒரே பந்துவீச்சுப் பாணிக்கு பழகிப் போனவர்களால் திடீரென அதனை மாற்றுவது அவ்வளவு இலகுவானதெல்லவென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிரிக்கெட்டை வாழ்வாதாரமாக நம்பியிருந்த பலரின் வாழ்க்கையை இது கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் சிறப்பான பந்துவீச்சாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.