3,053 Views
வித்தியாசமான கதைகளைக் கையிலெடுத்து, விமர்சனங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிகளையும் குவிக்கும் மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மீண்டும் தன் பழைய மார்க்கெட்டை பிடித்து விட்டார். இதனால், தன் அடுத்த படத்தை பார்த்து நிதானமாக திரைக்கதை அமைத்து வருகிறார்.
நெருங்கிய வட்டாரங்களின் மூலம் கிடைத்த தகவலின் படி இப்படம் இந்தியா-பாகிஸ்தான் சம்மந்தப்பட்ட கதை தானாம். ஏற்கனவே உயிரே, பம்பாய், ரோஜா போன்ற சர்ச்சையான கதைகளை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றவர் மணிரத்னம்.
தற்போது இந்த படமும் காதல் கதை தான் என்றாலும், இந்தியா-பாகிஸ்தான் சம்மந்தப்பட்ட கதை வேறு, மணிரத்னத்திற்கு சொல்லிய தரவேண்டும்? தன் அரசிய கருத்துக்களை இதில் திணித்தார் என்றால் அவ்வளவு தான் என்கின்றது கோலிவுட் வட்டாரம்.
ஆனாலும், துணிச்சல் அதிகமான மணிரத்னம் அப்படியாக படத்தை எடுத்தாலும், ஆச்சர்யப் பட எதுவுமில்லை என்பது நம்ம கருத்துங்கோ !!
-கோடம்பாக்கக் குருவி-