2,311 Views
அமெரிக்காவின், கலிபோர்னியாவைச் சேர்ந்த தாயொருவர் , தனது மகனின் காலில் பாம்பொன்று கடித்ததையடுத்து தனது வாயால் விஷத்தை உறிஞ்செடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஜெக்லின் கரமாசா என்ற 9 மாதக் கர்ப்பிணிப் பெண்ணே இத்துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
தனது மகனின் காலில் பாம்பு கடித்ததையடுத்து, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் , அவனது காலில் இருந்து விஷத்தை உறிஞ்செடுத்துள்ளார்.
பின்னர் குறித்த தாய் தனது மகனுடன் காரில் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இருவரும் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளனர்.
எனினும் கர்ப்பிணிப் பெண் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாதெனவும் அது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிகுமெனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.