9,691 Views
தமிழ் திரைப்படமொன்றில் இடம்பெற்ற நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் ' கிட்னி' , அதாவது சிறுநீரகம் தொடர்பான நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள்.
அதில், சிறுவனொருவனை வடிவேலு துரத்துவதும் , அவன் லாவகமாக நோயாளர் காவி வண்டியொன்றுக்குள் புகுந்துகொள்வதும் ,அங்கிருக்கும் கும்பல் வடிவேலுவின் சிறுநீரகத்தை சத்திரசிகிச்சை மூலம் எடுப்பதுமே அந்நகைச் சுவைக் காட்சியாகும்.
அண்மையில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படமும் இதேபோன்ற மனித உறுப்புத் திருட்டை (Illegal organ trafficking/ Trade) மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
இதை மேலோட்டமாக திரைப்படம் என்ற ரீதியில் பார்க்கும் போது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்றினாலும், மனித உறுப்பு திருட்டு (மனித உறுப்பு தானம் என்ற விடயத்தை தவிர்த்து ) என்பது மிகவும் அபாயகராமனதொன்றாக கருதப்படுகின்றது.
உறுப்பு அறுவடை (Organ harvesting) / சட்டவிரோத உறுப்பு வர்த்தகம் (illegal Organ trade) / உறுப்புக் கடத்தல் (organ trafficking) / உடலுறுப்பை நோக்காகக் கொண்ட சுற்றுலா (Transplant tourism ) என இவ்விடயம் மிகவும் பரந்தது.
இலங்கையிலும் வெளிநாட்டவர்களுக்கு மனித உறுப்புகளை விற்பனை செய்யும் ' Transplant tourism ' வலையமைப்பு ரகசியமாக செயற்பட்டதாகவும் இதில் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றும் , முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய புள்ளியொன்றும் பின்னால் இருந்த தாகவும் கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
எனினும் அவை வந்த வேகத்தில் காணாமல் போனதுடன் அது தொடர்பில் தெளிவைப் பெற்றுக்கொள்வதற்கு பலருக்கு , அக்கறையோ , நேரமோ இருக்கவில்லை.
இது இவ்வாறிருக்க இலங்கை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'சிறுநீரக வியாபாரம்' தொடர்பில் எமது ஹிரு செய்திப் பிரிவின் சி.ஐ.ஏ. வெளிப்படுத்தியுள்ளது.
பணத்தேவை உடையோரை / நலிவடைந்தோரிடம் இனிக்க இனிக்க பேசி , பண ஆசை காட்டி அவர்களிடம் சிறுநீரகத்தை பெற்றுக்கொள்ளும் இக் கறுப்பு வர்த்தகம் மாத்தளை மற்றும் கண்டியை தளமாக க் கொண்டு இயங்குகின்றது.
நீண்டநாட்களாக இது தொடர்பில் செய்திகள் அங்கும் இங்குமாக கசிந்திருந்தன.
இந்நிலையில் தற்போது இது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் எமது செய்திகளில் ஒளிபரப்பான காணொளிகள் இதோ: