Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
மீன்பாடும் தேன் நாட்டில் நாளை சூரியனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

Sooriyan FM's birthday - மீன்பாடும் தேன் நாட்டில் நாளை சூரியனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,919 Views
தேமதுரத் தமிழோசையை உலகெங்கும் பரப்பி வரும் சூரியனுக்கு நாளை வயது 17.
ஒரு சில ரசிகர்களைக் கொண்டு நாங்களே முதலிடம் என சொல்லிக்கொள்ளும் வானொலிகள் ,  மழைக்கு முளைக்கும் காளான்கள் போல எண்ணற்ற இணைய வானொலிகள் என இரைச்சல் மிக்க இலங்கை தமிழ் வானொலித்துறையில் தனக்கான பாதையில் 17 ஆண்டுகாலம் வெற்றி நடைபோடுபவன் சூரியன். 
 
தங்களை வலுமிக்கவர்கள் எனக் கூறியவர்கள் வழுக்கி விழுந்ததையும், பல்வேறு நிறங்களாக மின்னுவதாக எண்ணியோரின் சாயங்கள் நாளடைவில் வெளுத்துப் போனதும் இலங்கை வானொலித்து துறையில் தான். 
 
புதிய தமிழ் வானொலிக் கலாச்சாரத்திற்கு வித்திட்ட சூரியன் இன்று அசைக்க முடியாத ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றது. 
 
கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி அழகு தமிழில் பேசி வானொலித் துறையில் வித்தைகள் பல புரியும் சூரியனின் வெற்றிக்கு புதிய கற்பனை ,  புதிய முயற்சி , மாறி வரும் ரசனைக்கேற்ற நிகழ்ச்சிகள் என காரணங்கள் ஏராளம்.
 
இந்நிலையில் சூரியனின் வெற்றிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக நாளை தனது 17 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றான்.   தமது ஆதாரமான  ரசிகர்களின் கண்களில் மண்ணைத்தூவி  போலியான நிகழ்ச்சிகளை செய்துவரும் ஊடகங்கள் இருக்கும் இதே நாட்டில் தனது ரசிகர்கள் மத்தியிலேயே பிறந்தநாளை சூரியன் கொண்டாடவுள்ளான்.
 
பிறந்தநாள் கொண்டாட்டங்களை  கடந்த சில வாரங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்ட சூரியன் தனது நேயர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வருவது நீங்கள் அறிந்ததே.
 
 
சூரியன் மெகா பிளாஸ்ட் 
 
சூரியனின் 17வது பிறந்தநாளையொட்டி மட்டக்களப்பில் சூரியன் மெகா பிளாஸ்ட் நிகழ்ச்சி நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில்  நாளை மாலை 7 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம் என்பதுடன் எதிலுமே முன்னோடியாக திகழும் சூரியன் இம்முறையும் பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளான்.

 
ஆம், இம்முறை சூரியனின் மெகாபிளாஸ்ட் நிகழ்ச்சி , பிரம்மாண்ட  நவீன பாணியிலான மேடையில் இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழ் வானொலித்துறையில் அரைவட்ட வடிவிலான மேடையை அமைத்து புரட்சி செய்ததுடன், அதன் பின்னர் பலர் இதனை பின்பற்றவும் காரணமாக இருந்துள்ளான் சூரியன்.

 
அதேபோல் இம்முறை மேடையின் வடிவத்தை சூரியன் மாற்றியுள்ளான். இம்முறை நீள் சதுர வடிவிலான புதிய மேடையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது நேயர்களுக்கு புது அனுபவமாக அமையவுள்ளது.
 
இனிமையான ஒலியினால் நேயர்களின் காதுகளை திருப்திப்படுத்தக் காத்திருக்கும் சூரியன் , கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையிலான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளான்.  ஒளியைப் பீச்சிடும் லேசர் லைட்கள் , கண்களைக்கவரும் எல்.ஈ.டி. இனால் ஆன 'வோல்' என நீங்கள் எதிர்ப்பார்க்காத புதுமைகள் பல உங்களுக்கு நாளை காத்துள்ளன.

 
இதுமட்டுமா? முன்னர் எப்போதும் இல்லாத வகையில் வான வேடிக்கை காட்சிகளும் நாளை நடத்தப்படவுள்ளன, எனவே நேயர்கள் விண்ணைப் பார்த்து வாயைப் பிளப்பதும் உறுதியாகியுள்ளது. எனவே நாளைய தினம் இரவிலும் சூரிய தரிசனம் காத்திருக்கின்றது என்றால் மிகையல்ல.
 
 
இந்தியக் கலைஞர்கள்
 
முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை நான்கு இந்தியக் கலைஞர்கள் உங்களை இசையால் குஷிப்படுத்தக் காத்துக்கொண்டுள்ளனர். 

 
இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்த சூரியன் இம்முறையும் இந்திய பாடர்கள் நால்வரை மெகாபிளாஸ்ட் நிகழ்ச்சிக்காக அழைத்து வந்துள்ளான்.
 
கடல் படத்தில் 'மூங்கில் தோட்டம்' , ஜீவா படத்தில் 'ஒருத்தி மேலே மீண்டும்' என உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பாடல்களைப் பாடிய அபய் ஜோத்புர்க்கார்,   நினைத்தாலே இனிக்கும் பட த்தில் அழகாய் பூக்குதே என்ற பாடலை பாடிய ஜானகி ஐயர் மற்றும் அனிதா, பிரபு ஆகியோரையும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ள சூரியன் உங்களை இசை வெள்ளத்தில் மூழ்கடிக்க காத்துள்ளான்.

 
இந்நிலையில் அவர்கள் அனைவரும் இன்று எமது சூரியன் கலையக த்துக்கு வருகை தந்திருந்தனர்.  

 
ஆசிய ஒலி/ ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வானொலியான சூரியன் எஃப்.எம்.  ஆரம்பம் முதல் இன்றுவரை மிகத் திறமையான வழி நடத்தலுடன் முதல்தரமாக வெற்றிநடை போடுகின்றது. 
 
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெய்னோ சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய இந்நிகழ்ச்சிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளன.
 
அதேபோல் , சூரியனின் தூணாக கருதப்படும் நிகழ்ச்சிப் பணிப்பாளர் லோஷன் மற்றும் குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அயராது முன்னெடுத்து வருகின்றனர். 
 
மீன்பாடும் தேன் நாட்டில் நாளை உங்களையும் வரவேற்கின்றது சூரியன் குடும்பம்.


      


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top