Mahinda says to no to the post of Opposition leader - எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் - மகிந்த - (Audio) - ExclusiveSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,849 Views
தாம் எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தாம் கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர் ஒருவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒத்துழைத்து செயற்படுவீர்களா? என்று அவரிடம் எமது செய்திப்பிரிவு கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் வழங்கிய மகிந்தராஜபக்ஷ, கண்டிப்பாக ஜனாதிபதிக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவருடன் தமக்கு தனிப்பட்ட பகைகள் எவையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய பட்டியல் விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.