"பசங்க" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் பாண்டிராஜ். இவருடைய இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் "இது நம்ம ஆளு".சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவருடன் இந்த படத்தில் ஜோடி சேர்கின்றார் என்பதும் பரவலாக பேசப்படுகின்ற விசயமாகியிருக்கின்றது.அத்தோடு,
தன்னைப் பற்றி ஏதாவது ஒரு விஷயம் பேசப்பட வைப்பதில் சிம்புவுக்கு நிகர் அவரே தான், இந்தப் படத்திலும் கூட பேசவைத்திருக்கிறார்,
சிம்புவின் "இது நம்ம ஆளு" படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகமாகிறார் சிம்புவின் தம்பி குறளரசன். பல பிரச்சனைகளுக்குள் சிக்கித் தவித்து ஒரு மாதிரியாக, எல்லாவற்றையும் கடந்து, கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறவுள்ள ஒரு பாடல் தவிர்ந்த, ஏனைய பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், இதன் படப்பிடிப்பு நிறைவடையும் தறுவாயில் உள்ளது.
தன் தம்பியின் இசையில்,இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஆக வந்திருப்பதால் தான் சந்தோசமாக இருப்பதாகவும், படப்பிடிப்பு சம்பந்தமாகவும் தனது ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சிம்பு.

இந்தநிலையில் தான், "இது நம்ம ஆளு" படத்தின் க்ளைமேக்ஸ் பாடலை மட்டும் தான் குறளரசன் இசையமைத்தார் என்றும், மற்றபடி முழுப்படத்துக்குமே இசையமைத்தது சிம்பு தான் என்றும் ஒரு கிசுகிசு கிளம்பியுள்ளது. அதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது.
கலைக்குடும்பத்திலிருந்து வந்ததனால் தமிழ் சினிமாவில் தன்னைப்போலவே தன் தம்பிக்கும் ஒரு பெரிய அறிமுகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சிம்புவே இந்தப் படத்தின் அனைத்து இசைப்பணிகளையும் கவனித்து தம்பி குறளரசனின் பெயரில் இசை வெளியீடு செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
#என்ன தான் அள்ளி எடுத்தாலும் பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும். இருக்கா..? இல்லையா..? பொறுத்திருந்து பார்ப்போம்...