6,414 Views
இங்கிலாந்து அணிக்கெதிரான அண்மைய தொடரில் துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்துவரும் விராட் கோஹ்லி சச்சினை நெருங்குகிறார்.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றதற்கு பின்னர் அடுத்த சச்சின் என்ற நிலையில் அநேகரால் நோக்கப்பட்டவர் இந்த கோஹ்லி.
மைதானத்தை நோக்கி வீரர்கள் சொகுசு வாகனத்தில் பயணிக்கையில் அதுவரைக்கும் சச்சின் பயணித்த அதே இருக்கையில் இருந்து மைதானத்துக்கு சென்றதன் மூலமாகவும் தான் அடுத்த சச்சின் என்பதை அடையாளப்படுத்தினார் கோஹ்லி.
வெறுமனே 25 வயதுக்குள் 138 ஒருநாள் போட்டிக்குள் 19 சதங்களை விளாசி சாதனைகள் பலவற்றையும் முறியடித்தவர்.
பிரபல Bollywood நட்சத்திரம் அனுஷ்கா சர்மாவுடன் ஏற்பட்ட காதலில் சிக்குண்டு தன் துடுப்பாட்ட பலத்தை திடீரென இழந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்க்ஸ்களில் 134 ஓட்டங்களை பெற்று ஏமாற்றம் கொடுத்தார்.
இந்தநிலையில் அடுத்த சச்சினுக்கு(கோஹ்லி) நடந்த கதி என்னவென்று எல்லோரும் ஏளனம் செய்து கொண்டிருக்கையில் கோஹ்லி இப்போது Twitter தளத்தில் சச்சினை நெருங்கி வருகிறார்.
இந்தியா சார்பில் அதிக பின்தொடர்பவர்கள் இருக்கும் விளையாட்டு வீரர் சச்சின். 4.6 மில்லியன் பின்தொடர்பவர்கள் சச்சினுக்கு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோஹ்லி 4 மில்லியன் Twitter பின்தொடர்பவர்களை எட்டியிருக்கிறார்.
அப்படியானால் சச்சினுக்கு அடுத்து இப்போது கோஹ்லி தானா?