ஐ.பி.எல். கிரிக்கட் மோசடி வழக்கில் இருந்து மூன்று கிரிக்கட் வீரர்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, டெல்லி காவற்துறையினர் மேன்முறையீடு செய்துள்ளனர்.
டெல்லியின் விசாரணை நீதிமன்றம் ஒன்று கடந்த ஜுலை மாதம் 25ம் திகதி சிறிசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அன்கீட் சவான் ஆகியோரை ஐ.பி.எல். குற்றச்சாடுகளில் இருந்து விடுவித்திருந்தது.
அவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
எனினும் இதனை எதிர்த்து டெல்லி மேல் நீதிமன்றத்தில் காவற்துறையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதன்படி குறித்த வீரர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை டெல்லி விசாரணை நீதிமன்றம் உரிய முறையில் பகுப்பாய்வு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.