வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் அவரது தம்பி பிரேம்ஜி.
மாஸ் படத்தில் நடித்தபோது ஹீரோயின் நயன்தாராவை ஆன்ட்டி என்று தமாஷ் செய்தபோது அவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.
தற்போது பிரேம்ஜியை சிலர் இணைய தளங்களில் மாங்கா என்று நக்கலடிக்கின்றனர். இதுபற்றி கூறும்போது, ‘என்னை யார் என்ன திட்டினாலும் கவலைப்படமாட்டேன். இணைய தளத்தில் திட்டு வாங்கி வாங்கி எனக்கு மறுத்துப்போய்விட்டது.
மாங்கா மடையன் என்று பொருள்படும்படி திட்டுகிறார்களே என்கிறார்கள். ‘மாங்கா’ என்ற படத்தில் நடிப்பதால் அப்படி சொல்கிறார்கள். நிஜமாகவே அப்படி திட்டினாலும் கவலை இல்லை.
எனக்கு பிடித்த ஒரே நடிகை காஜல் அகர்வால்தான். அவரை நேரில் பார்த்தபோது ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ என்றேன். அருகில் இருந்தவர்கள் ஏன் இப்படி அவரை பார்த்து வழிகிறாய்னு நக்கலடித்தார்கள்’ என்றார்.
நன்றி : இந்திய ஊடகம்