Thajudeen's murder - வசீம் தாஜூடீன் உயிருடன் எரிக்கப்பட்டாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
8,011 Views
வசீம் தாஜுடீனின் மரணமானது சுய நினைவிழந்தமை, உடல் உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் நெருப்பால் ஏற்பட்ட காபன் மொனக்சைட் வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த சமரசேகர நீதிமன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
தாஜுடீனின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தனது இறுதி அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் கலா நிதி ஆனந்த சமர சேகரவின் இறுதி சட்ட வைத்திய அறிக்கை நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டது.
தாஜுடீனின் காரில் தீ பரவிய போது அவர் உயிருடனேயே இருந்ததாகவும், எனினும் அப்போதும் அவர் சுய நினைவிழந்து இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாஜுடீனின் இரத்தத்தில் எத்தனோல் கலந்திருந்ததாகவும், சம்பவம் இடம்பெற சுமார் இரு மணி நேரத்துக்கு முன்னர் அவர் மது அருந்தியிருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட காயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.