Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
வேதாளம் கதை இதுவா? : பரபரப்பான கதை வெளியாகியது

Vedhalam story - வேதாளம் கதை இதுவா? : பரபரப்பான கதை வெளியாகியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,162 Views
அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா அனிருத் இசையமைத்து உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.



ஏற்கனவே படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு விட்டன. தற்போது இரண்டாம் கட்ட  பணிகளை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. படத்தின் இசை அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16ம் தேதி வெளியானது

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வேதாளம் படத்தின் கதை தற்போது இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. இப்படத்தின் கதைச் 'பாட்ஷா' படத்தைப் போலவே அமைந்திருக்கிறது. கொல்கத்தாவில் கணேஷ் என்ற பாத்திரத்தில் தனது தங்கை தமிழ் (லட்சுமி மேனன்) உடன் வாழ்ந்து வருகிறார் அஜித். அங்கு வரும் வில்லன்கள் 'வேதாளம்' எப்படி இங்கே என அதிர்ச்சியடைகிறார்கள். அதற்கு பிறகு ப்ளாஷ்பேக்கில் கதை விரியும்போது, சென்னையில் வேதாளம் என்ற தாதாவாக இருக்கிறார் அஜித். அங்கு எதிரிகளை எல்லாம் அழித்துவிட்டு, இந்த வாழ்க்கை வேண்டாம் என்று தன்னை மறைத்து கொல்கத்தாவில் வாழ்ந்து வந்திருப்பது தெரியவருகிறது. இறுதியில் அஜித் என்ன செய்தார் என்பது தான் கதையாம்.

இந்தக்கதை எந்தளவுக்கு உண்மை என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இது ஒரு பக்கம் இருக்க, இது வேதாளம் படத்தின் கதையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சிலர் சொல்கின்றனர். இந்தக்கதைக்கும் வேதாளம் கதைக்கும் சம்மந்தமில்லை என்று அவர்கள் கூறினாலும் இணையத்தில் வெளியான இந்தக்கதை வேதாளம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அந்தக்கதை இதுதான்...

இப்படத்தில் அஜித் கார் டிரைவராக, பரம சாது போன்று நடிக்கிறார். தங்கை லட்சுமிமேனன் மீது அதிகபாசம் கொண்டவர். ஏழை மாணவியான லட்சுமிமேனனுக்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்காக தங்கையுடன் கொல்கத்தாவுக்கு குடிபெயருகிறார் அஜித். அங்கு சர்வதேச அளவில் கடத்தல் உட்பட பல குற்றங்களை செய்யும் கபீர்சிங், அஜித் வசிக்கும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். லட்சுமிமேனனின் கல்லூரித்தோழியாக வரும் சுருதிஹாசன், அஜித்தை ஒருதலையாக காதலிக்க தொடங்குகிறார். இதற்கு இடையே, ஒரு மோதல் சம்பவத்தால் கபீர்சிங்கின் ஆட்கள் அஜித் ஓட்டும் கால்டாக்சியில் போதைமருந்தை வைக்க, அதை போலீஸிடம் ஒப்படைக்கிறார் அப்பாவியான அஜித். இந்த விவகாரம் மீடியா மூலம் பெரிதாகி, போலீஸார் கபீர்சிங்கின் ஆட்களை கைது செய்கின்றனர். இதனால் கபீர்சிங்கின் கவனம் அஜித் மீதும், லட்சுமிமேனன் மீதும் திரும்புகிறது. தொடரும் தாக்குதல் சம்பங்களில் லட்சுமேனன் கொல்லப்பட, அஜித்தால் நடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

பிறகு ஸ்ருதிஹாசன், அஜித்தை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறார். அங்கே மருத்துவமனையில் அஜித்துக்கு விபரீத அனுபவங்கள் ஏற்படுகிறது. அவர் ஒரு ஆவி யை சந்திக்கிறார். அது... அஜித் நெம்பர் டு. இவர் அப்பாவி அஜித்துக்கு நேர்மாறாக, அடாவடி கெத்து அஜித்தாக இருக்கிறார். அவரது நண்பர்கள் சூரி மற்றும் அஸ்வின். ஊரில் பெரும் புள்ளியான பார்வையற்ற தம்பிராமையாவை பாதுக்காகிறது இந்த அணி.

தம்பிராமையாவின் சொத்துக்களை குறிவைக்கும் எதிரிகள் கெத்து இருக்கும் வரை அவரை நெருங்க முடியாது என உணர்ந்து, கெத்து அஜித்தின் நெருக்கமான நண்பரான அஸ்வினை துரோகியாக்கி, அஜித்தை கொடுரமாக வீழ்த்துகிறார்கள். ஆவி அஜித்தின் கதையை கேட்டு, முதலில் அவருக்கு உதவ முடிவு எடுக்கிறார், அஜித். சாது அஜித்தின் உடலுக்குள் கெத்து அஜித்தின் ஆவி புகுந்து கொள்ள, அப்புறம் என்ன பரபர பழிவாங்கும் படலம்தான். முதலில் லோக்கல் எதிரிகளை முடித்துவிட்டு, கொல்காத்தா, தாய்லாந்து என பறக்கிறார்கள் அஜித். வேதாள வேட்டை எப்படி என்பதே மீதிக்கதை.

சாதா அஜித் பழிவாங்கினாலே அதிரும். அதுவும் அமானுஷ்ய சக்திகள் படைத்த ஆவி, வேதாள அஜித் பழிவாங்கினால்...கேட்க வேண்டுமா... கெத்து அஜித், தல ரசிகர்களுக்கான ஸ்பெஷல் என்றால், தங்கை சென்டிமெண்ட், காதல் என்று வாழும் அமைதி அஜித் எல்லாருக்குமான கெட்டப். எல்லா எதிரிகளையும் முடித்த பின், அவ்வளவு தான் சுருதிஹாசனோடு செட்டில் ஆகிவிடலாம் என அஜித் நினைக்கும்போது மீண்டும் வருகிறது வேதாளம். வேறு ஒரு அசைன்மெண்டுக்கு.

மீண்டும்.......ஆரம்பம் என்பதோடு படம் முடிவடைகிறதாம்!

நன்றி: இந்திய ஊடகம் 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top