Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
ஆசிய நாட்டவர்கள் பந்தை எறிகின்றனர் - நடுவர் டரெல் ஹெயர் டரெல் ஹெயர்க்கு பைத்தியம் என்கிறார் ஹர்பஜன்.

Role Models for 'Chuckers' -murali,saglain,bhaji - ஆசிய நாட்டவர்கள் பந்தை எறிகின்றனர் - நடுவர் டரெல் ஹெயர் டரெல் ஹெயர்க்கு பைத்தியம் என்கிறார் ஹர்பஜன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

580 Views
ஆசிய நாட்டவர்கள் பந்தை எறிகின்றனர் - நடுவர் டரெல் ஹெயர்.
டரெல் ஹெயர்க்கு பைத்தியம் என்கிறார் ஹர்பஜன்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அண்மைய நடவடிக்கைகள் காரணமாக பல சுழல் பந்து வீச்சாளர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.இவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டமையும் நோக்கத்தக்கது.

அண்மைய நாட்களில் இலங்கையின் சச்சித்திர சேனநாயக்க,பாகிஸ்தானின் அஜ்மல்,வங்களாதேசின் சோகக் காஸி   நியூஸ்லாந்தின் கன் வில்லியம்சன், ஜிம்பாபெயின் ப்ரோப்பேர் உட்சயா ஆகியோருக்கு ICC  தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.    

இப்படியிருக்கின்ற போது 1995 ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் வைத்து Boxing Day டெஸ்ட் போட்டியில் இலங்கையின் முரளிதரனுக்கு "No ball"  பிடித்து சர்ச்சையை தோற்றுவித்த அவுஸ்ரேலியாவின் நடுவர் டரெல் ஹெயர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கொஞ்சம் ஆசிய நாட்டவர்களை சீண்டி இழுத்திருக்கிறது.

அவுஸ்ரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட்(Sydney Morning Herald) நேர்காணலின்  போதே டரல் ஹெயார் சர்சையான கருத்துக்களை வீசி எறிந்திருக்கிறார்.



இந்தியாவின் ஹர்பஜன், இலங்கையின் முரளி, பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் ஆகிய பந்து வீச்சாளர்களை சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதித்திருக்கக் கூடாது என்று அவுஸ்ரேலியாவின் முன்னாள் நடுவர் டரெல் ஹெயார்  கூறியுள்ளார்.

பந்துவீசாமல் எறிபவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேற்றிருக்க வேண்டும் .பந்தை எறிபவர்களை அனுமதித்தால் ஒரு காலத்தில் பந்தை யாரும் ஒழுங்காக வீசாமல் எல்லோரும்  பந்தை எறிவார்கள்.சக்லைன் முஷ்டாக், ஹர்பஜன், முரளிதரன் ஆகியோரை பின்பற்றுவார்கள் என்று எச்சரித்தேன்.

இப்போது செய்வது போல் அப்போதே ICC இவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.1990 ஆம் ஆண்டுகளின் இறுதியிலேயே நான் கூறிய கருத்துக்களை யாரும் கணக்கில் எடுக்கவில்லை.அப்போதே கணக்கில் எடுத்திருந்தால் இப்போது இது பிரச்சனை ஆகியிருக்காது என்று அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஹர்பஜன், “இவரது பேச்சு கொஞ்சம் அதிகம்தான். நாங்கள் பந்து வீச்சில் வரம்பு மீறவில்லை, ஆனால் டரல் ஹெயர் வாயால் வரம்பு மீறிவிட்டார் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல் தெரிகிறது" என்றும்  ஹர்பஜன் இதற்க்கு பதில் கொடுத்துள்ளார்கள்.

நாங்கள் கண்டு பிடித்த தூஸ்ராவை இப்போது இளம் தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர், அதற்காக வரம்புக்கு மீறி முழங்கையை மடக்கி வீசினால் தான் தூஸ்ரா விழும் என்று அர்த்தமில்லை, முறையாக வீசியே தூஸ்ராவைச் சாதிக்க முடியும்.
டரல் ஹெயார்  தனது வாயை மூடிக் கொண்டு போகட்டும் என்றும் ஹர்பஜன்  சீறியுள்ளார்.

டரல் ஹெயாருடைய கருத்துகள் எப்போதும் ஆசிய நாட்டு பந்து வீச்சாளர்களை சீண்டி இழுக்கின்ற விதத்திலும்,கோபமூட்டும் விதத்திலும் இருந்தமை வரலாறே !!!!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top