தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த ரவிசாஸ்திரி, மும்பை மைதான கள பராமரிப்பாளரை கடுமையாக திட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் முறைப்பாடும் அளித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது நாள் போட்டி மும்பை வென்கடே மைதானத்தில் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், மும்பை வென்கடே மைதானத்தின் கள பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம், இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுதிர் நாயக், ரவிசாஸ்திரி மீது மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் எழுத்துபூர்வமான முறைப்பாட்டுக் கடிதமொன்றை அளித்துள்ளார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறுகையில், "அவுஸ்திரேலிய பயணத்தின் போது விராட் கோஹ்லி இந்திய பத்திரிகையாளரை திட்டிய போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதுபோல் இந்த சம்பவமும் கவனத்தில் கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதிர் நாயக் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது குறிபிடத்தக்கது.
ரவியின் செயற்பாட்டுக்கு , சஞ்சே மஞ்சேகர் உட்பட பலர் கண்டம் தெரிவித்துள்ளனர்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 438 ரன்களை குவித்தது. அந்த அணியில் 3 பேர் சதம் விளாசினர். இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் 10 ஓவர்கள் வீசி, 106 ரன்களை வாரி இறைத்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்னுக்கு சுருண்டது. இதனால் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம், இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிட்ச் பராமரிப்பாளர் சுதிர் நாயக், ரவிசாஸ்திரி மீது மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் எழுத்துபூர்வமான புகார் கடிதம் அளித்துள்ளார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறுகையில், "ஆஸ்திரேலிய பயணத்தின் போது விராட்கோலி இந்திய பத்திரிகையாளரை திட்டிய போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதுபோல் இந்த சம்பவமும் கவனத்தில் கொள்ளப்படும்" என்று கூறினார்.