3,861 Views
புலி தயாரிப்பாளர்கள் தனக்கு 50இலட்ச ரூபாய் சம்பளம் நிலுவை வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் சங்கத்தில்முறைப்பாடு செய்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த 'புலி' படம் அண்மையில் வெளியானது. இந்த படம் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
நீண்ட காலத்திற்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி தமிழ் படத்தில் நடித்திருந்தார். இதற்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளத் தொகை எவ்வளவு என்று தெரியவில்லை.
ஆனால் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் இன்னும் 50இலட்ச ரூபாய் நிலுவை வைத்திருப்பதாக' புலி ' படத் தயாரிப்பாளர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டுள்ளார்.
புலி படத்தை பி.டி. செல்வகுமார் , சிபு தமின்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்த புகார் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமின்ஸ், ''ஸ்ரீதேவியின்முறைப்பாடு குறித்து இப்போதுதான் எனக்கு தகவல் கிடைத்தது. எனக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருந்தது. ஸ்ரீதேவி அவர்களின் முறைப்பாட்டை தற்போது அதனை ஒத்தி வைத்து விட்டேன். எனது பங்காளருடன் கலந்து பேசி முடிவைத் தெரிவிப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.