9,554 Views
இலங்கையில் வீதிப் போக்குவரத்து தொடர்பில் உடனுக்குடன் தரவுகளைத் தரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
கூகுள் 'மெப்ஸ்' ஊடாக இனி போக்குவரத்து நிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.
போக்குவரத்து நெரிசல் குறைவான , சீராக வாகனம் பயணிக்கக்கூடிய நிலையில் உள்ள வீதிகள் பச்சை நிறத்தாலும், மோசமான நெரிசல் நிலவும் வீதிகள் சிகப்பு நிறத்தாலும் குறிக்கப்படுகின்றன.
கூகுள் மெப்ஸ் தளத்திற்கு சென்று , இடது புறத்தில் உள்ள , பட்டனை அழுத்தி 'Traffic' என்ற சொல்லை தெரிவு செய்வதன் மூலம் , இவ்வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.
அல்லது இதை விட இலகுவாக செல்லவிரும்பின், கூகுளில் 'Traffic' என தேடுவதன் மூலம் உங்களை அங்கேயே கொண்டு சென்றுவிடும்.
இத்தரவுகளை கூகுள் எமது ஸ்மார்ட் போன்கள் உட்பட பல மார்க்கங்கள் மூலமாக பெற்றுக்கொள்கின்றது. இது தொடர்பில் தெரிந்துகொள்ள பேரார்வம் இருப்பின் , இங்கு வாசித்தறியுங்கள் : கூகுள் 'Traffic'