Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
மீன்பிடி ஏற்றுமதி தடை குறித்து ஐரோப்பிய ஒன்றியம்

#sooriyanfm #news - மீன்பிடி ஏற்றுமதி தடை குறித்து ஐரோப்பிய ஒன்றியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,551 Views

இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள மீன் மற்றும் அத்துடன் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை விரைவில் அகற்றப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக நீர் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தடை காரணமாக கடந்த சில வருடங்களாக இலங்கை பெருமளவிலான வருவாயினை இழந்து வருகின்றது.

இந்த ஏற்றுமதி தடை காரணமாக இலங்கை வருடாந்தரம் இரண்டாயிரத்து 300 கோடி ரூபா வருமானத்தை இழந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னர் 68 சத வீதமான மீன் மற்றும் மீன் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

மிகுதியான 32 சத வீதமான மீன் தொடர்பான பொருட்கள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த இந்த தடையினை அகற்றுவதற்கு இலங்கை மேற்கொள்ள வேண்டிய சில மாற்று நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.

அதற்கு ஏற்ற வாகையில் இலங்கை தற்போது பல நிபந்தனைகளை பூர்த்தி செய்த நிலையில் அதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிசீலனைக்காக அனுப்பி இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் உரிய முறையில் இலங்கையில் மேற்கொள்ளப்படுவதற்கான ஏதுநிலை உள்ளதா என்பதனை நேரடியாக அவதானிக்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தொழில்நுட்ப குழுவொன்று இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top