தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் இந்த வருடம் தனது இரசிகர்களுக்கு இரண்டு திரைப்படங்களைக் கொடுத்து அவர்களைக் கொண்டாட வைப்பதற்குத் தயாராகி இருக்கிறார்.
அதில் 'விடாமுயற்சி' திரைப்படம் எதிர்வரும் February மாதம் 6 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இத் திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் Trailer வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பத்திக்கிச்சு' பாடல் வெளியாகி தற்போது வரை இணையத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.