பொதுவாக பழங்கள் எல்லாவற்றிலுமே ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் வெப்பமண்டலப் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுவது மங்குஸ்தான் பழம்.
இதில் பல ஊட்டச்சத்துகள் உள்ளடங்கியுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் விரும்பிச் சாப்பிடப்படும் ஒரு பழமாகவும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது.
மங்குஸ்தான் பழத்தில் உள்ள Vitamin C சத்தானது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இதிலுள்ள Vitamin C சத்தானது தோலில் உண்டாகும் குறைபாடுகள் மற்றும் சுருக்கம் போன்றவற்றைப் போக்கி தோலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. அத்துடன் கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்வலி போன்றவற்றையும் சுகமடையச் செய்கின்றது.
மங்குஸ்தான் பழத்தில் உள்ள ஒமேகா அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இதிலுள்ள நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சினைகளைக் குறைத்து செரிமான சக்தியையும் அதிகரிக்கின்றது.
மேலும் மங்குஸ்தான் பழம் புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்களுக்கும் தீர்வைத் தரக்கூடியது.