நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகின்றனர்.
GV பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தத் திரைப்படம் இம்மாதம் 10ஆம் திகதி வெளியாகும் என ஆரம்பத்தில் படக்குழு அறிவித்திருந்தது. வெளிநாட்டில் படப்பிடிப்பு இருப்பதுதான் இத்திரைப்படத்தின் தாமதத்திற்குக் காரணம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் தற்போது 'இட்லி கடை' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இத்திரைப்படம் ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.