6,062 Views
இலங்கையில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கொலைகளில் ஒன்று றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலையாகும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இக்கொலையின் மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருகின்றது.
இக்கொலை தொடர்பில் நாளாந்தம் புதுத் புதுதகவல் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில், றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ.சீ.டிவி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
தற்போது இரகசிய காவல் துறையினரிடம் இருக்கின்ற காணொளிகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்
அந்த காணொளிகளில் சில பிரபுக்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வசீம் தாஜூதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த வியாழக்கிழமை அது திட்டமிட்ட கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது
விஷேட மருத்துவ குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.