அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் ஐயரின் இடது விலாப்பகுதி பலமாக அடிபட்டது.
இதையடுத்து, அணியின் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஒரு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ், தற்போது உடல்நிலை சீரானதையடுத்து (Condition is Stable) வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.