பாஸ்வேர்டு இல்லாத Twitter
Facebook,Twitter,E-mail என பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றோம். அனைத்திற்குமான கடவு சொற்களை நினைவில் வைத்துகொள்வது என்பது கஷ்டமான ஒரு விடயமாகவே இருக்கிறது, அதுமட்டும் இல்லாமல் கடவுச்சொல் திருட்டு என பல பிரச்சனைகளுக்கும் முகம்கொடுக்கவேண்டியுள்ளது இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண twitter முயற்சி செய்துள்ளது.
கையடக்க தொலைபேசியில் twitter ஐ பயன்படுத்தும்போது கையடக்க தொலைபேசி எண், எந்த நாடு என்ற விபரத்தை மட்டும் தெரிவித்தால் போதும். உறுதிப்படுத்தும் எண்கள் நமக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் உள்ளே நுழையலாம். நீங்கள் பயன்படுத்தி முடித்த உடன் இந்த உறுதிப்படுத்தும் எண்கள் இயல்பாகவே செயலிழந்து விடும்.
இனியென்ன பிரச்சனை வரப்போகின்றது.கடவுச் சொல் மறந்தாலும் twitter ஐ இலகுவாக பயன்படுத்தலாம்.
*இணையத்திலிருந்து தொகுத்தவர் -வர்ஷி