சிம்பு -அனிருத்தின் பீப் பாடல் பற்றியே இப்போது பலரது பேச்சும் உள்ளது.
அப்பாடல் அவர்களை பொலிஸ் விவகாரம் வரை கொண்டுசென்றுள்ளது.
இந்நிலையில் அனிருந்த் மீது ரஜினி கடும் கோபத்தில் உள்ளாராம்.
முதல் முதலில் அனிருத் சர்சையில் சிக்கியது தன்னைவிட பல வயது மூத்த நடிகை ஆன்ட்ரியாவுடன் இருப்பது போன்ற படங்களை வெளியிட்ட போதுதான்.
அப்போதே அனிருத்தை அழைத்து, 'பெரிய அளவுக்கு வரவேண்டிய பையன் நீ... பாத்து நடந்துக்கோ' என்று ரஜினி அறிவுரை கூறியதாக செய்தி வெளியானது. அடுத்து ஒரு படுமோசமான ஆங்கிலப் பாட்டு ஒன்றை அவரே வெளியிட்டார்.
உடனடியாக போலீஸ் சம்மன் பறந்தது. ஓடோடி வந்தார் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ரவி ராகவேந்தர். கமிஷனரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து பையனை மீட்டு வந்தார்.
அன்றே அனிருத்தை அழைத்த ரஜினி, 'நான் முன்பே சொல்லிவிட்டேன். நாளை என் படத்துக்கே கூட இசையமைக்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்கலாம். ஒழுக்கமாக நடந்து கொள்ளாவிட்டால் இப்போது கிடைத்துள்ள வாழ்க்கையே பாழாகிவிடும்' என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.
இப்போது பீப் பாடல் விஷயம் கேள்விப்பட்டு கடும் கோபமடைந்ததாராம். அடுத்து தன் குடும்பத்தினருக்கு அவர் போட்ட உத்தரவு.. 'எக்காரணம் கொண்டும் அனிருத்தை வீட்டுப் பக்கம் வரவிடாதீர்கள்' என்பதுதான். இதை அனிருத் வீட்டுக்கும் சொல்லிவிட, அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்களாம்.
அடுத்து தன் மகள்களை அழைத்து, "அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிருங்கள். வேறு இசையமைப்பாளர்களை அமர்த்திக் கொள்ளுங்கள்" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாராம். இதில் ரஜினி மருமகன் தனுஷுக்குதான் பெரும் சங்கடமாம். அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு அனிருத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.