ஏ. ஆர் முருகதாசின் இயக்கத்தில் விஜய், சமந்தாவின் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகிய திரைப்படம் 'கத்தி'. பல சவால்களைத் தாண்டி இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது இந்தப்படம்.
இப்படத்தைப் பற்றி பேசும் போது நிச்சயமாக நாம் இன்னொருவரைப் பற்றிப் பேசவேண்டும். அது இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான். 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இப்படங்களின் பாடல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
கத்தியின் பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக தீட்டப்பட்டுள்ளது. ஆத்தி என நீ, செல்பி புள்ள, பாலம், பக்கம் வந்து, தீம் பாடல் என அத்தனையும் இப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றது. பாடல்கள் அத்தனையும் ஹிட் ஆனதன் காரணமாக, இப்படத்தின் கதாநாயகன் இளைய தளபதி விஜய், இந்த சுட்டிப் பையன் அனிருத்திற்கு பெருமதிமிக்க பியானோ ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். 'இது எனக்கு விஜய் சார் பரிசளித்த பியானோ' என அனிருத் டுவிட்டரில் பதிவிற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - ர.பிரவீனா