உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்மஸ் என்ற புனித நத்தார் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெற்றன.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் மாத்திரமல்லாமல் ஏனைய மதத்தினரும் நத்தார் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
யேசுபிரான் பெத்தலஹேமில் மாட்டு தொழுவத்தில் அவதரித்த நாளை நினைவுக்கூரும் முகமாகவே நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலகில் மக்களுக்காக துன்பங்களை ஏற்றுக்கொண்ட யேசுபிரான் அவதரித்த இந்த கிறிஸ்மஸ் தினத்தில் அனைவருக்கும் நன்மைக்கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இறையருளை வேண்டுவதும், அன்பளிப்புக்களை வாரிவழங்கும் நாளாகவும் இது கருதப்படுகிறது.
ஓவ்வொரு வருடமும் உலகின் விடிவுக்காக, மனித குல விடிவுக்காக கிறிஸ்மஸ் தினத்தில் மேற்கொள்ளப்படும் ஆராதனைகள் இந்த முறையும் நடத்தப்படுகின்றன.
இந்த தருணத்தில் சூரியன் எப் எம் செய்திசேவையும் உலக விடிவுக்காக இந்த கிறிஸ்மஸ் தினத்தில் கடவுளிடம் கேட்கப்படும் வேண்டுதல்களில் தம்மை இணைத்துக்கொள்கிறது.