விஜய் நடித்த 'புலி' உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் பாணியில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார்.
சுகுமார் இயக்கவுள்ள இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சார்மி உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா, இந்த படத்தின் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.
விஜய்யுடன் 'கத்தி', 'தெறி' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள சமந்தா தற்போது மகேஷ்பாபுவுடன் 'பிரமோத்சவம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் தனுஷூடன் 'வடசென்னை' படப்பிடிப்புலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.