4,389 Views
'வேதாளம்' இறுதிகட்ட படப்பிடிப்பில் ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அஜித்துக்கு அடிபட்டது. இதனால், உடனடியாக் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். மருத்துவர்கள் சுமார் 6 மாதங்கள் ஒய்வெடுக்க அறிவுறுத்திருப்பதால், அஜித் மீண்டும் மே மாதம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார்.
அப்படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சிவா. கதை அனைத்தும் முடிவாகி, திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் சிவா.
இந்நிலையில், மே மாதம் முதல் ஒரே நேரத்தில் 2படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள். ஒரு படத்தை இயக்குநர் சிவா மற்றொரு படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் ஆகியோர் இயக்க இருக்கிறார்கள்.சிவா படத்தை தீபாவளிக்கும், விஷ்ணுவர்தன் படத்தை பொங்கலுக்கும் வெளியாகும் வகையில் தனது பணிகளை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித்.