அட்லாண்ரிக் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால், 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் இன்னும் நிறைவுக்கு வந்திருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், குறித்த சர்வதேசத்தின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமாதானத்தை ஏற்படுத்தவும், நீண்டகால பிரச்சினைகளை தீர்க்கவும் தற்போது சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தவறவிடக்கூடாது என்பதையும் எரிக் சொல்ஹெயம் அறிவுறுத்தியுள்ளார்.