'காதலனை பல முறை கத்தியால் குத்தி கொன்ற இரக்கமற்ற காதலி '
இந்த காலக் காதல்கள் பற்றி சொல்லவா வேண்டும் .உயிரை கொடுக்கும் காதல் மாறி உயிரை எடுக்கும் காதல் இப்பொது நடந்து கொண்டிருகிறது .இதை உறுதி படுத்தும் வகையில் இடம் பெற்ற சம்பவம் ஒன்று தான் இது .
டோரியன் பவல் 21 வயது ,இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்நார்டினோ நகரில் வசித்து வந்துள்ளார் .இவர் நாகாசியா ஜேம்ஸ் 18 வயது என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் .
காதலித்த நிலையில் ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுள்ளது .வாக்குவாதம் அதிகரிக்க அதை பொறுக்க முடியாத நகாசியா காதலன் டோரியன் பவலை கதியில் குத்தி கொன்றுள்ளார் .இதையிட்டு பேஸ்புக் வலைத்தளத்தில் இவர் ஒரு கத்தியால் அவரை சரமாரியாக குத்தினேன் .அவர் இறப்பார் என எதிர்பார்க்கவில்லை .ஆனால் அவரது உயிர் பிரிந்து விட்டது .எனவே நான் தலைமறைவாகிவிட்டேன்.என ஒப்புதல் வாக்குமூலம்அளித்துள்ளார் .
நான் எதிர் பார்க்காமல் என் காதலனை குத்தி விட்டேன் இதை கடவுள் அறிவார் .என்னை மன்னித்து விடு இறைவா ,பவல் உன் ஆன்மா சாந்தி அடைவதாக எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர் ஹெமட் என்ற நகரில் தங்கி இருந்ததை அறிந்த பொலிசார் விரைந்து சென்று கைது செய்தனராம் .