வெங்கட் பிரபு இயக்கிவரும் த்ரில் மற்றும் காமெடி கலந்த கலவைதான் சூர்யாவின் மாஸ்.
சூர்யா நயன்தாரா, பிரணீதா, பிரேம்ஜி அமரன், கருணாஸ் ஆகியோருடன் இன்னும் பலர் நடித்துவரும் படம் இது.
படத்தின் படப்பிடிப்புக்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் மூலமாக பல்கேரியா நாட்டை பல கோணங்களில் தமிழ் இரசிகர்கள் கண்டுகளிக்கப் போகிறார்கள்.
அத்தோடு, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வளரும் பாடல்களில், சூர்யாவின் அறிமுகப் பாடலுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக் குடியில், இந்தப்பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நயன்தாராவும் சூர்யாவும் தான் இந்தப் பாடலில் கலந்து கட்டுகிறார்கள். அத்தோடு, எதிர்வரும் ஏப்ரலில் படம் திரையில் நமக்காக வரவிருகின்றது என்கிறது படக்குழு.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-