தமிழ் திரையுலகில் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த திரைப்படங்களில் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரனே முன்னிற்கிறது.
இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இரசிகர்கள் கொடுத்த வரவேற்பு, இமாலய சாதனையை பெற்றுக் கொடுத்தது எனலாம்.
இந்நிலையில், ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் எந்திரன் பாகம் 2இல் நடிக்க ஆயத்தமாகி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. அத்தோடு, இந்தப்படத்தில் ஹிந்தியின் இன்னொரு சூப்பர் ஸ்டார் அமீர்கானும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் செய்தியை நாமல்ல, தென்னிந்திய ஊடகங்களே பரப்பி வருகின்றன. அண்மையில், அமீர்கான் ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருந்தார். அந்த சந்திப்பில் இந்த விடயமும் பேசப்பட்டதா என்பது குறித்து இப்பொழுது அலசப்படுகிறது.
ஷங்கர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் நடிக்கவிருக்கும் நிலையில், 2016ஆம் ஆண்டில் படவேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அத்தோடு, கதையைப் போல இவர்கள் மூவரும் இணைந்தால் இதுவே ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிகப் பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்படும் படமாக அமையுமென சினி உலக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-