அஜித் விஜய்யோடு தனது சினிமா வாழ்க்கையை அமோகமாக தொடங்கியவர் நடிகை சங்கவி. அஜித்துடன் அமராவதி படத்தில் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர், பின்னர் விஜய்யுடன் ரசிகன் படம் தொடங்கி இன்னும் பல படங்களில் நடித்து முன்னணிக்கு வந்தார்.
கவர்ச்சிக்கு கூட, நோ சொல்லாத அம்மணி, தன் பங்குக்கு அள்ளி வீசினார். பல படங்களிலும், பல நடிகர்களோடும் ஜோடியானார். பின்னர் என்ன ஆனதோ, அவருக்கு இருந்த கிராக்கி கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் தொடங்கி ஒரு கட்டத்தில், எந்த வாய்ப்புக்களுமே இல்லாமல் போனது.
பட விழாக்கள், சினிமா நிகழ்வுகளில் அவ்வப்போது தன்னை காண்பித்துக் கலந்துகொண்ட சங்கவி, இப்பொழுது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதுவும், கௌரவ வேடத்தில்!
நவீன் இயக்க, இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ளார் இந்த மாஜி நடிகை சங்கவி. இனி அண்ணி, மற்றும் அக்கா வேடங்களிலும் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-