இப்பொழுதுள்ள நாயகிகள் திகில் படங்களிலும், சரித்திர, புராண படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ரசிகர்களும் இதுபோன்ற படங்களை விரும்பி பார்க்கிறார்கள். இதுபோன்ற படங்கள் வசூலிலும் சாதனையில் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நாயகிகளில் முதல் மூன்று முக்கியமானவர்கள் இவர்கள்தான். அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா.
அனுஷ்காவுக்கு ஒரே மாதிரியான படங்கள் குவிகின்றன. ஏற்கனவே ‘அருந்ததி’ படம் அவரை உச்சத்துக்கு கொண்டு போனது. தற்போது ‘ருத்ரமா தேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர படங்களில் நடித்து வருகிறார்.. இவை கதாநாயகி பாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்கள் என்பது முக்கியமானது. . ருத்ரமா தேவியில் ராணி வேடத்தில் வருகிறார். குதிரை சவாரி, வாள் சண்டை பயிற்சிகள் பெற்று நடிக்கிறார். இப்படங்களுக்கு பிறகு அனுஷ்கா மார்க்கெட் இன்னும் உயரும் என்கின்றனர்.
நயன்தாரா ‘மாயா’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதில் வித்தியாசமான வேடத்தில் ஆக்ரோஷமாக வருகிறார். ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து பாராட்டுகள் பெற்றார் இந்த அம்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை காதல், டூயட் என வந்த திரிஷாவும் தற்போது திகில் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. விரைவில் நடிக்க ஆயத்தமாகி விட்டார் த்ரிஷா. இவரது பாத்திரம் மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவர்களோடு, லட்சுமிராய், ஹன்சிகா, டாப்சி, ஆண்ட்ரியா ஆகியோர் திகில் படங்களில் நடித்தவர்கள் என்பதும் முக்கியமானது. அழகிகளை அகோரிகளாக காட்டுவதில் நம்ம இயக்குனர்களுக்கு என்ன ஆசையோ தெரியாது போங்க.
-கோடம்பாக்கக் குருவி-