அஜித் விஜய் பற்றி பேசுவதென்றால், ஆஹா ஓஹோ என பேசிக்கொள்ளும் நம்ம இரசிகர்கள், அதே அளவுக்கு அகோரமாக சண்டையிட்டும் வார்த்தைகளால் மோதிக்கொண்டும் தமது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது தெரிந்ததே!
இந்நிலையில், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு அஜித் விஜய் படங்கள் தொடர்பான ஆரம்ப அம்சங்கள் வெளியாகி, இரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளன. அதுவும் நிறைய நாட்களுக்குப் பின்னர், இவர்கள் இருவரின் படங்களும் ஒன்றாக வரவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்து வரும் புலி, கேரளாவில் நடைபெற்று வருகிறது. மிக வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கள் 60சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதேபோல, படத்தின் முதல் லுக் சித்திரைப் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.
அஜித்தின் படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதே போலவே தல 56 பட ஆரம்ப விழாவும் இதே புத்தாண்டு தினத்தில் தான் நடைபெறவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
எனவே, இரு பெரிய நட்சத்திரங்களும் தமிழ் புத்தாண்டு அன்று தமது படங்களுக்கான, நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்த ஆயத்தமாகியுள்ளன என்பது இரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்!
-கோடம்பாக்கக் குருவி-