கடவுள் இல்லை என்று சொல்லல... இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் என்று கடவுள் விஷயத்தில் ஊர் உலகத்தை குழப்பி வரும் கமல் பரவாயில்ல போலிருக்கிறது.
பரம்பரை நாத்திகராக தன்னை அடையாளம் காட்டி வரும் சத்யராஜ், இப்போது ஒரு படத்தில் பேயாக நடிக்க போகிறாராம். கடவுள், மூட நம்பிக்கை என்று பேச்சு வரும்போதெல்லாம் விடாமல் விவாதம் புரிவார் சத்யராஜ்.
பொது மேடைகளில் கூட இது போன்ற சப்ஜெக்டுகள் கிடைத்தால்நார் நாரா கிழித்துவிடுவார்.
அப்படிப்பட்ட சத்யராஜ் எப்படி பேயாக நடிக்கிறார்? வேறொன்றுமில்லை. இது பெற்ற கடன். சத்யராஜ் மகன் சிபிராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அல்லவா?
அந்த படம் பேய் சப்ஜெக்ட் படம். இப்போதைய ட்ரென்ட்டும் அதுதானே. அதனால் நம்பி நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் சத்யராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பட வட்டாரம் விரும்ப, தானே தன் அப்பாவிடம் வற்புறுத்தி இதில் நடிக்க வைத்தாராம்.
இன்னும் ஷுட்டிங் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் எந்த பேயாவது சத்யராஜ் மனசில் புகுந்து முடிவை மாற்றாமலிருக்க வேண்டும்.
=== CASTRO RAHUL ===