வீதி ஒழுங்கை மீறுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் அனைத்து காவற்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
தற்போது வீதி ஒழுங்கு தொடர்பான சட்டங்களை அமுலாக்கும் அதிகாரம் வாகன ஒழுங்கு காவற்துறையினரிடமே இருக்கிறது.
இந்த நிலையில் இந்த அதிகாரத்தை அனைத்து காவற்துறையினருக்கு வழங்குவது குறித்து காவற்துறை மா அதிபருடன் ஆலோசனை நடத்தி வருவதாக, பொது சமாதான அமைச்சின் செயலாளர் ரீ.எம்.கே.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.