1,375 Views
முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் மீதான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க , தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட, மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மத விவகாரங்களுக்கான ஆலோசகராக செயற்பட்ட வடினாபக சோமானந்த தேரர் ஆகியோர் மீதான விசாரணைகள் துரிதமாக நடைபெறவுள்ளன.
நிதிமோசடி விவகாரங்கள் தொடர்பாகவே இவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.