Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தனது அடுத்தப்படமான 'பென்சில்' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவருடைய மூன்றாவது படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.

இப்படத்தில் நடிப்பது குறித்து, தனது நடிகர் அவதாரம் குறித்தும் கூறிய ஜி.வி, "நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வர தயாராக உள்ளது’

“தற்பொழுது கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம் அதன் கதைக்காகவும் , அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த  உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். .விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஒன்  த வே டி  செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் சொல்லினார்

CastroRahul
314 Views

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்’ நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  நடந்தது. இதில் நடிகர் நாசர், நடிகைகள் கௌதமி, ஊர்வசி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், லிங்குசாமி, விக்ரமன், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு. விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:–

ரஜினியையும், என்னையும் பாலச்சந்தர்தான் கண்டுபிடித்தார் என்று கூறி வருகிறார்கள். பாலச்சந்தர் இல்லாவிட்டாலும் கூட ரஜினி முரட்டுக்காளை போன்றவேறு ஏதாவது ஒரு படத்தின் மூலம் நடிகனாகி இருப்பார். ஆனால் பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன்.

பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள். அதை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாக தொடர்கிறது. எனது மகா குருவாக அவரை கருதுகிறேன்.

உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு கிடைத்த பெரிய பெருமை. இந்த பாடல் வெளியீட்டு விழா மேடையில் அவர் இருப்பார் என்றுதான் அப்போது நான் கருதி இருந்தேன். அவர் இருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்து இருந்தால் இன்னும் பல சிறப்புகளை அவருக்கு செய்து இருப்பேன்.

பாலச்சந்தரில் நான் பாதியாக இருக்கிறேன் என்று இங்கே பேசிய பார்த்திபன் குறிப்பிட்டார். அப்படி அவர் பேசியதை கர்வமாக எடுத்துக் கொள்ளாமல் கடமையாகவும் உரிமையாகவும் ஏற்றுக் கொள்கிறேன்.

பாலச்சந்தர் என்ற மாமனிதரின் நிழலாக நான் இருப்பேன். அவர் பணிகளை தொடர்ந்து செய்வேன். காலமெல்லாம் அவருக்கு நன்றி உள்ளவனாகவும் இருப்பேன்.

இவ்வாறு கமல்ஹாசன் உருக்கமாக பேசினார்.

CstroRahul


 

343 Views
அழகுப் பதுமை, ஆறடி அழகி அற்புத நடிப்பாற்றல் கொண்ட நடிகை என பல நாமங்களால் அர்ச்சிக்கப்படும் நடிகை அனுஷ்காவின் நடிப்பில் பாகுபாளி மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்கள் வரவுள்ளன.

இந்நிலையில், ஆர்யாவுடன் இணைந்து ஜீரோ சைஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது என்பது இன்னும் சிறப்பு.

பொதுவாக, நாயகிகளை மட்டும் நம்பி படமெடுப்பது குறைவு, ஆனாலும், அனுஷ்காவை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டி படமெடுக்க பலரும் தயார். அந்தளவுக்கு அவரது நடிப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம்.

என்ன சிறப்பு என்று சொன்னால், இந்த ஜீரோ சைஸ் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் அனுஷ்கா. உடல் எடை அதிகரித்த தோற்றம் ஒன்றும், ஒல்லியான தோற்றத்தோடு இன்னொன்றுமாய் புதிய பரிணாமத்தில் தோன்றுகிறார். பல நாயகர்கள் தமது படங்களுக்காய் உடலை வருத்தி உழைக்கும் நேரத்தில், நடிகையாக தன்னையும் அடையாளம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் அனுஷ்கா.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
2,421 Views
அனேகன் படத்தில் பாடலாசிரியர் ராகேஷ் எழுதி இடம்பெற்ற டங்கமாரி ஊதாரி பாடல் வெளியாகிய நாளில் இருந்து இன்று வரைக்கும், மிகப் பெரிய வரவேற்பையும் செம்ம ஹிட் என்கிற அளவுக்கு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அந்தளவுக்கு, பாடல் சாதாரண சென்னைத் தமிழில் எல்லா மட்டத்துக்கும் பிடிக்கும் அளவுக்கு இசைக் கோர்ப்போடு வந்துள்ளது. அனேகன் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தனுஷ் மற்றும் மரண கானா விஜி ஆகியோர் பாடியிருந்தார்கள்.

இப்பொழுது, அந்தப் பாடலுக்கு போட்டியாக இன்னொரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையைக்க ஜெயம் ரவி ஹன்ஷிகா நடித்துவரும் ரோமியோ ஜூலியட் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதுவும் டங்கமாரி பாடலாசிரியர் ராகேஷ் எழுத, இமானின் இசையில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். பாடலின் ஆரம்ப வரி டண்டனக்கா என ஆரம்பிக்கிறது.
இந்தப் பாடலும் அந்தப் பாடல் போல, சாதாரண தமிழில் எல்லோரையும் மிகக் கவர்ந்த பாடலாக மாறியுள்ளது. அத்தோடு டங்கமாரிக்கு கிடைத்த அதே பாராட்டும் வரவேற்பும் இந்த டண்டனக்காவுக்கும் கிடைத்திருக்கிறது.

இன்றைய தினம், உங்கள் சூரியனிலும் டண்டனக்கா பாடல் அறிமுகப் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டங்காமாரிக்கும் தனுஷுக்கும் எதிராகவே இந்த டண்டனக்கா பாடலை இமானும் அனிருத்தும் உருவாக்கியுள்ளதாக இன்னொரு தரப்பு கிசுகிசுக்கிறது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
373 Views

‘மொழி’, ‘அபியும் நானும்’ ‘பயணம்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘உப்பு கருவாடு’. இதில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமரவேல், சாம்ஸ், ரக்ஷிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் இசையமைக்கிறார். இவருடைய இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘புது ஒரு கதவு திறக்குது…’ என்ற பாடலை கௌதம் மேனன் பாடியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் ராதாமோகன் கூறும்போது, இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது.

கௌதம் அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு துள்ளலை தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ் கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். கௌதம் மேனன் பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார்.

கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

391 Views

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், மீண்டும் திரைக்கு தன் தலையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார் தற்போது ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார்.

 

‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக, ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம். ‘மெளன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும் ‘அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.

‘ரோஜா’ முதல் தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும் 12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு நிமிடம் இருபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலரை மார்ச் 6-ம் தேதி முதல் திரை அரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

 

329 Views
வாங்காத விருதுகள் இல்லை. பெறாத பாராட்டுக்கள் இல்லை. சர்வதேச ரீதியாக இசையை மகுடமிடச் செய்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தளவுக்கு புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளவர் இவர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இவரது 'ஜெய்ஹோ' ஆவணப்படம் வெளிவந்துள்ளது. அத்தோடு, சூர்யாவின் ''24'' படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவ்வாறு பல வாய்ப்புக்களும் இவரைத் தேடிப் போகையில், நியூயார்க் சென்றுள்ள ரஹ்மான், அங்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''ஒரே மாதிரி இசையமைத்து சலித்து விட்டது. இனி திரைக்கதை எழுதுவது  மற்றும் படங்களை தயாரிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபடவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக சொன்னார் என்பது புரியாமலும், இனி இவரது இசையை கேட்க முடியாது போகுமோ என்றும் இரசிகர்கள் கவலையடைந்துள்ளமை குறிப்படத்தக்கது.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி- 
520 Views
தமிழ் மலையாளம் தெலுங்கு என, பல மொழிகளிலும் பிரபலமான நடிகை ஷகீலா தற்போது ''ரொமாண்டிக் டார்க்கெட்'' எனும் படத்தை தெலுங்கில் எடுத்து வருகிறார். பெண்கள் மீதான கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழும் பெண்ணின் கதையாக இந்தப்படம் தயாராகி வருகிறது.

இருட்டு உலகுக்குள் நடக்கும் பயங்கரங்களை இந்த உலகுக்கு சொல்லப் போகிறேன் என்று, சபதமிட்டு இறங்கியுள்ளார் ஷகீலா. அத்தோடு, தான் நடிகையாக அறிமுகமானபோது தொடக்கம், இன்று வரைக்கும் அனுபவித்த இன்னல்கள், துயரங்களையும் காட்சிகளாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஷகீலாவின் இந்தப் படம் மூலம் தமது அந்தரங்கங்கள் அம்பலத்துக்கு வருமென பல அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் இன்னும் பல தரப்பினரும் பயந்து போய் தனக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஷகீலாவே தெரிவித்துள்ளார்.
       அத்தோடு இந்த மிரட்டல்களுக்கு பயந்து போக மாட்டேன். படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வருமெனவும்  சொல்கிறார் இந்த மலையாளத்து மாமி ஷகீலா.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
350 Views
தானே தனக்கு சூனியம் வைத்த கதையாக வடிவேலுவின் படலம் முடிந்து போன கதையாக இருந்தது. ஆனாலும், நடித்தால் நாயகனாகத்தான் நடிப்பேன் என்று மீண்டும் எலி  மூலம்  களம் புகுந்துள்ளார். அதுவும் விஜய்யின் புலி படத்துக்கு, எதிரான படம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும், இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இப்பொழுது ஒரு செய்தி பிறந்திருக்கிறது.

அதாவது, ஏற்கனவே வடிவேலு மற்றும் விஜய் பல படங்களில் இணைந்து நடித்து தமது நடிப்பின் மூலமாக இரசிகர்களை அள்ளிக் கொண்டவர்கள். பகவதி, வசீகரா, போக்கிரி, சுறா, காவலன் போன்ற படங்களில் வடிவேலுவும் விஜய்யும் இணைந்து நடித்திருந்தார்கள். காலம் கடந்தும் இன்றும் இரசிக்க வைக்கும் காட்சிகளாக அவை பதியப்பட்டுள்ளன.

இந்த வரிசையில், இப்பொழுது அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய்யும் வடிவேலுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிகிறது. வடிவேலுவின் எலியும் விஜய்யின் புலியும் நிறைவடைந்ததும், அடுத்த புதுப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
பார்க்கலாம்!! அன்று நம்மை சிரிக்க வைத்ததைப் போல, இந்த இணைவும் சிரிக்க வைக்குமா என்று பார்ப்போம்!!

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
524 Views
19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ருத்ரமாதேவி எனும் அரசியாரின் வாழ்க்கையை சொல்லும் படமாக தயாராகி வருவதே அனுஷ்கா நடித்து வரும் ருத்ரமாதேவி.

குணசேகர் இயக்கிவரும் இப்படம் பல நாட்களாக பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டு வருகிறது. எக்கச்சக்கமான பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது. அத்தோடு, இதில் வீரப் பெண்மணியாக நம்ம அனுஷ் நடித்து வருகிறார்.

கலை இயக்குனர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் பல பிரம்மாண்டமான அரங்கங்களை படத்துக்காக உருவாக்கியுள்ளார்கள். இவற்றோடு ஒரிஸாவில் 1000 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான துணை நடிகர்கள் பங்குபற்றும் போர்க்கள சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கு மத்தியில் இன்னுமொரு ஆச்சர்யமான செய்தியுமுண்டு!

அனுஷ்கா இப்படத்திலே அணியும் தங்க ஆபரணம் ஒன்று மிக நுட்பமாக தனியார் நகைத் தொழிலகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளது. யாவை பயன்படுத்தப்பட்டதும் மிக விரைவில் ஏலத்தில் விடப்படவுள்ளன. இந்த நகைகளை வாங்குவதற்கு ஏகப்பட்ட கிராக்கி இப்பொழுதே நிலவுவதாக சொல்லப்படுகிறது.

நமக்கு இது ஒத்துவராதுப்பா எனும் ரேஞ்ச் தான்! என்ன விலை தெரியுமா மக்கள்ஸ்? ஐந்து கோடிகள் கடந்து செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொன்னேன்தானே? கேட்டிங்களா?

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
410 Views
ந்தவிதமான முடிவும் எடுக்காமல், எனக்கு ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாக வீட்டை விட்டு வெளியேறிய தனது கணவரை மீண்டும் தனதில்லம் அழைத்து, தமிழ் சினிமாவில் பிரபலமான கவிதாயினி தாமரை தனது மகன் சமரனோடு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

2001இல் தியாகு எனும் அரசியல் பிரமுகர் ஒருவரை மணந்து கொண்ட தாமரைக்கு, 7 வயதில், சமரன் எனும் மகனுள்ளார். அத்தோடு, சிறிதுகாலம் சுமூகமாக நடந்த இவர்களது இல்வாழ்க்கை, பின்னர் படிப்படியாக கருத்துவேறுபாடு காரணமாக பிளவுபடத் தொடங்கியது. அடிக்கடி தர்க்கங்கள் ஏற்பட்டன.

2012இல் பிரச்சினைகள் முற்றிய நிலையில், தியாகு வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் நண்பர்களின் சமரசப் பேச்சுவார்த்தையின் காரணமாக, பிரிந்த தியாகு தாமரையுடன் இணைந்து வாழத்தொடங்கினார். இவ்வாறு கடந்து போன நிலையில், மீண்டும் பழையபடி பிளவுகள் ஏற்படத் தொடங்கின.

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்ற தன் கணவர் மீண்டும் வரவே இல்லை என்று தெரிவித்து இன்று, அதிரடியாக தனது மகனோடு கணவரின் கட்சி அலுவலகத்தின் முன்னால்  அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
    கணவர் தன் வீடு வந்து சேரும்வரை, இந்த உண்ணாவிரத்ததை கைவிடப் போவதில்லை என்றும் கவிதாயினி தாமரை தெரிவித்துள்ளமை, திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

படம் உதவி ’ஆந்தை ரிப்போர்ட்டர்’- ஆந்தை குமார்.
380 Views
இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் ஸ்ருதி ஹாசன், ஹன்ஷிகா, ஸ்ரீதேவி, தம்பி ராமையா, சுதீப், பிரபு போன்ற நட்சத்திர கூட்டணியில் உருவாகிவரும் படம் புலி. பெயரே கொஞ்சம் பீதியைக் கிளப்புவதாக அமைந்துள்ளதால், படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு அலை கிளம்பியிருக்கிறது.

அன்று போலவே, தனது படங்களில் பாடிவரும் விஜய், இப்பொழுதும் தனது பாடகர் பணியை திறம்பட செய்து வருகிறார். அவர் அண்மையில் வந்த தனது படங்களிலும் ஒவ்வொரு பாடல்களை பாடி ஹிட்டடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுதான், இப்பொழுது நடித்துவரும் புலியிலும், விஜய்யை வைத்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். அதன்படி, ஸ்ருதி ஹாசனோடு இணைந்து விஜய் பாடும் ஒரு டூயட் பாடல் புலியில் இடம்பெறவுள்ளது. அடுத்த 2015இன் ஹிட் பாடலாக இந்த பாடலும் மாறும் என்பது உறுதி.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
348 Views

தமிழ் சினிமாவில் இப்பொழுதுள்ள அத்தனை முன்னணி நடிகர்களோடும் போட்டி போட்டு இணையாக நடித்து பல காலங்களை தன்கட்டுப் பாட்டில் வைத்திருந்த கனவுக் கன்னி நடிகை சிம்ரன். ஆறடி ஒல்லி அழகி, அசத்தல் நடனம் அழகுக்கேற்ற நடிப்பென  இவருக்கு பல நடிகர்களே இரசிகர்களாக இருந்தார்கள் எனலாம்.

கொடி கட்டிப் பறந்த நடிகை சிம்ரன், காதலித்து திருமணம் செய்துகொண்டு நம் சினிமா உலகுக்கு கை காட்டி விடை கொடுத்தார். ஆனாலும், ஆடிய பாதம் ஓயாது என்பது போல, இவரது மீள் வருகைக்காக காத்திருந்தார்கள் இரசிகர்கள்.
காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது.

ஆம், சிம்ரன் மீண்டும் வெள்ளித்திரையில் கால் பாதிக்கிறார். அதுவும் ஜி.வி பிரகாஷ்குமார் நடிக்கும் '' த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'' படத்தின் மூலமாகவே இவரது மறுபிரவேசம் நிகழ்கிறது.

ஜி.வி பிரகாஷ் ஜோடியாகவா என்று அவசரப்பட்டு யோசிக்காதீங்க மக்கள்ஸ்! அவருக்கு கயல் நாயகி ஆனந்தி இருக்காங்க, சிம்ரன் இந்தப் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் வெளுத்து வாங்கவுள்ளார் என்ற சொல்லப்படுகிறது.
            எனவே, எது எப்படியோ? சிம்ரன் மீண்டும் வந்தாச்சு, சந்தோசம் ஹா ஹா ஹா

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
3,956 Views
வெறி பிடித்த 'தல' ரசிகன் நான் - இளையதளபதி.

தமிழ் திரையுலகில் தற்போதைய நிலையில் இரு பெரும் வசூல் நட்சத்திரங்களாகவும், அடுத்த சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு பொருத்தமானவர் யார் என்ற போட்டியில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் தான் 'தல' அஜித் மற்றும் 'இளையதளபதி' விஜய் ஆகியோர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களே இவர்களின் நடிப்புக்கான திகதி கேட்டுக் வீட்டுவாசலில் காத்திருக்கும் அளவிலான Box Office ஹிட் கொடுக்கின்ற ஜாம்பவான்கள் இவர்கள்.

இவ்வாறு நீயா...? நானா...? போட்டியில் இருவரும் உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் 'தல' அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டுமென தன் மனதிலுள்ள எதிர்பார்ப்பை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். சங்கரின் இயக்கத்தில் நடிப்பதென்பது அவ்வளவு சுலபத்தில் கிடைக்கின்ற வாய்ப்பு அல்ல. இந்தநிலையில், நம்ம இளையதளபதி விஜய்யை வைத்து சங்கர் "நண்பன்" படத்தை எடுத்திருந்த நிலையில் தற்போது அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசை சங்கரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இது இப்படியிருக்க, என்னதான் அஜித்தை வைத்து சங்கர் படம் இயக்க  தற்போது விரும்பினாலும், நம்ம இளையதளபதி விஜய்யை வைத்தே முதலில் படம் இயக்கியிருந்தார். அதனால் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் போட்டியில் முன்னணியில் இருப்பது இளையதளபதி தான் என்று அவர் ரசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

     

இந்தநிலையில், அவர்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலவும் 'தல' ரசிகர்களை உசுப்பேற்றுவது போலவும் "அஜித்தை வைத்து ஒரு படமாவது பண்ண வேண்டும், நான் முதலில் ஜீன்ஸ் படத்திற்கு அஜித்தை தான் கேட்டேன். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் எங்கள் இருவரையும் சேர்ந்து பணியாற்ற விடவில்லை." என இயக்குனர் சங்கர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

இது இவ்வாறிருக்க, ரசிகர்கள் தங்களுக்கிடையே 'தல'யா..? 'தளபதி'யா...?என முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் சங்கர் தன் கருத்தைகூறி விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திஇருக்கும் நிலையில், இளையதளபதி விஜய் அதற்கும் ஒருபடி மேலேபோய், தன் பங்குக்கு ஒரு கருத்தைக் கூறி தனது ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அஜித்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அஜித்திடம் எனக்கு பிடித்ததே அவருடைய தன்னம்பிக்கை தான். எல்லோரும் நினைக்கிறார்கள் அஜித் என்னுடைய பரம எதிரி என்று. ஆனால் உண்மை அதுவல்ல, அவருடைய வெறிபிடித்த  ரசிகன் யார் என்று கேட்டால், முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்" என கூறியிருக்கிறாராம் விஜய்.

"ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்...."
பழமொழி உண்மைதான் போலும்.

*கணேசமூர்த்தி ராகவன்.
919 Views
மீகாமன் திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு  எனும் படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு, யட்சகன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவைகளின் நிறைவுக்கு பின்னர், ஒரு புதிய நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஆறடி அழகி அனுஷ்கா நடிக்கவுள்ளார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில், ஸ்ருதி ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

எப்படி, இந்த அம்மணி சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதித்தார் என்பதுதான் இப்பொழுது பலராலும் பேசப்படும் விடயமாய் மாறியுள்ளது.
ஆக, . ஸ்ருதி என்ன செய்கிறார்? எப்படி நடிக்கிறார் என்று பார்ப்போம்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
502 Views
[1]      «      1718   |   1719   |   1720      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top