மீகாமன் திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு எனும் படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு, யட்சகன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவைகளின் நிறைவுக்கு பின்னர், ஒரு புதிய நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஆறடி அழகி அனுஷ்கா நடிக்கவுள்ளார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில், ஸ்ருதி ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
எப்படி, இந்த அம்மணி சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதித்தார் என்பதுதான் இப்பொழுது பலராலும் பேசப்படும் விடயமாய் மாறியுள்ளது.
ஆக, . ஸ்ருதி என்ன செய்கிறார்? எப்படி நடிக்கிறார் என்று பார்ப்போம்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-