வெறி பிடித்த 'தல' ரசிகன் நான் - இளையதளபதி.தமிழ் திரையுலகில் தற்போதைய நிலையில் இரு பெரும் வசூல் நட்சத்திரங்களாகவும், அடுத்த சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு பொருத்தமானவர் யார் என்ற போட்டியில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் தான் 'தல' அஜித் மற்றும் 'இளையதளபதி' விஜய் ஆகியோர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களே இவர்களின் நடிப்புக்கான திகதி கேட்டுக் வீட்டுவாசலில் காத்திருக்கும் அளவிலான Box Office ஹிட் கொடுக்கின்ற ஜாம்பவான்கள் இவர்கள்.
இவ்வாறு நீயா...? நானா...? போட்டியில் இருவரும் உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் 'தல' அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டுமென தன் மனதிலுள்ள எதிர்பார்ப்பை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். சங்கரின் இயக்கத்தில் நடிப்பதென்பது அவ்வளவு சுலபத்தில் கிடைக்கின்ற வாய்ப்பு அல்ல. இந்தநிலையில், நம்ம இளையதளபதி விஜய்யை வைத்து சங்கர் "நண்பன்" படத்தை எடுத்திருந்த நிலையில் தற்போது அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசை சங்கரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இது இப்படியிருக்க, என்னதான் அஜித்தை வைத்து சங்கர் படம் இயக்க தற்போது விரும்பினாலும், நம்ம இளையதளபதி விஜய்யை வைத்தே முதலில் படம் இயக்கியிருந்தார். அதனால் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் போட்டியில் முன்னணியில் இருப்பது இளையதளபதி தான் என்று அவர் ரசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தநிலையில், அவர்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலவும் 'தல' ரசிகர்களை உசுப்பேற்றுவது போலவும் "அஜித்தை வைத்து ஒரு படமாவது பண்ண வேண்டும், நான் முதலில் ஜீன்ஸ் படத்திற்கு அஜித்தை தான் கேட்டேன். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் எங்கள் இருவரையும் சேர்ந்து பணியாற்ற விடவில்லை." என இயக்குனர் சங்கர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.
இது இவ்வாறிருக்க, ரசிகர்கள் தங்களுக்கிடையே 'தல'யா..? 'தளபதி'யா...?என முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் சங்கர் தன் கருத்தைகூறி விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திஇருக்கும் நிலையில், இளையதளபதி விஜய் அதற்கும் ஒருபடி மேலேபோய், தன் பங்குக்கு ஒரு கருத்தைக் கூறி தனது ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அஜித்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அஜித்திடம் எனக்கு பிடித்ததே அவருடைய தன்னம்பிக்கை தான். எல்லோரும் நினைக்கிறார்கள் அஜித் என்னுடைய பரம எதிரி என்று. ஆனால் உண்மை அதுவல்ல, அவருடைய வெறிபிடித்த ரசிகன் யார் என்று கேட்டால், முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்" என கூறியிருக்கிறாராம் விஜய்.
"ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்...."
பழமொழி உண்மைதான் போலும்.
*கணேசமூர்த்தி ராகவன்.