அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் - பல்லம – பொத்துக்குளம் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு அமைச்சர் தன்னை தாக்கியதாக குறித்த இளைஞர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியதன் பின்னர் தன்னை அமைச்சரது வாகனத்திலேயே அழைத்து சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் எமது செய்தி சேவை பல்லம காவற்துறையினை வினவிய போது, குறித்த இளைஞர் அமைச்சரால் அழைத்து வரப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
அதன்பின்னரே, குறித்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்ததாக பல்லம காவற்துறையினர் தெரிவித்தனர்.